ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு நேற்று 1 சதவீதத்துக்கும் அதிகமாகச் சரிந்து ரூ. 1,159ல் முடிவடைந்தது. வர்த்தகத்தின்போது ஒரு கட்டத்தில் ரூ. 1,153.10-ஐத் தொட்டு 52 வார குறைந்தபட்சத்தை எட்டியது. ஜனவரியில் பதிவான அதிகபட்ச விலையிலிருந்து பங்கு சுமார் 28% சரிந்துள்ளது.
வெனிசுலா கச்சா எண்ணெய் விநியோகம் மீள்வதும், ரஷ்ய எண்ணெய் தள்ளுபடிகள் குறைவதும் ரிலையன்ஸுக்குச் சாதகமாகலாம் என யெஸ் செக்யூரிட்டீஸ் கணித்துள்ளது.பொதுத்துறை சுத்திகரிப்பாளர்களைவிட மொத்த சுத்திகரிப்பு லாப விகிதத்தில் பீப்பாய்க்கு 3 டாலர் முன்னிலை நீடிக்கலாம் என்பது அதன் மதிப்பீடு.
யெஸ் செக்யூரிட்டீஸ் வாங்கலாம் என்ற பரிந்துரையுடன் ரூ. 1,660 இலக்கை நிர்ணயித்துள்ளது; இது சுமார் 43% உயர்வு வாய்ப்பை குறிக்கிறது. மற்ற தரகு நிறுவனங்களின் இலக்குகள் ரூ. 1,675–1,700 வரை உள்ளன. இவை ஆய்வாளர்களின் கணிப்புகளே.